கரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களைப் பின்தொடருவதை சிறப்பாகச் செயல்படுத்தவும், அவர்கள் வீடுகளில் தான் தங்கியுள்ளனரா என்பதை அறிந்து கொள்ளவும் புனே நகரில் சையம் என்ற மொபைல்போன் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வீடுகளில் தனித்திருப்பவர்களைப் பின்தொடர, மாநகராட்சி நிர்வாகம் 5 மண்டலங்களுக்கு பிரத்யேக குழுக்களை நியமித்து தினசரி அடிப்படையில் கண்காணித்து வருகிறது.
வீடுகளில் தனித்து இருப்பவர்கள் சையம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனரா என்பதை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும். கைபேசி செயலி ஜிபிஎஸ் பின்தொடரும் வசதி கொண்டது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எப்போதெல்லாம் வீடுகளை விட்டு வெளியே செல்கின்றனரோ, அப்போது மாநகராட்சி நிர்வாகம் உஷார்படுத்தப்படும். உடனடியாக உள்ளூர் காவல் நிலையம் அல்லது அப்பகுதி வார்டுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைத் தொடர்பு கொள்வார்கள்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடிமக்கள் அனைவரும் கட்டாயமாக இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் கைபேசியில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அடையளம் காணப்பட்டவர்கள் கண்டிப்பாக ஜிபிஎஸ் வசதியை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்படுவது தொடரும் வரை, கைபேசி இணைப்பு 24 மணி நேரமும் இயக்கத்தில் இருக்கவேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நடமாட்டத்தை மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அறையில் இருந்தவாறு சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். கண்காணிக்கப்படும் நபர் வெளியே நீண்டநேரம் உள்ளதை சிவப்பு நிறம் சுட்டிக்காட்டும். மஞ்சள் நிறம் அவரது நடமாட்டம் சிறிது தூரத்தில் உள்ளதைக் குறிக்கும். பச்சை நிறம் அவர் வீட்டிலேயே தங்கியுள்ளார் என்பதைக் காட்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago