டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழப்பைச் சந்திக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை அறிவிக்கும் முதல் மாநிலம் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள் நலன் கருதி சனிக்கிழமையே முதல்வர் கேஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான அரசாணை நேற்றுமுன்தினம் வெளியானது.
கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 47 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்
இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “டெல்லி அரசுக்கு உட்பட்ட பகுதியில் கரோனா வைரஸ் எதிரான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள், அரசின் எந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மக்கள் பணியில் இருக்கும் தன்னார்வலர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் நிரந்தரமாக அல்லது தற்காலிகப் பணியயில் ஈடுபட்டு இருந்து அவர்கள் பணியின்போது மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago