மத்திய பிரதேசத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார்.
இந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு வேகமாக பரவியால் அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில் ‘‘கரோனா பாதிப்பு மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் மாநில அரசு முழுமையாக செயல்படவில்லை.
மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட இல்லை. கரோனாவை எதிர்த்து பணியாற்றுவதில் சுணக்கம் நீடிக்கிறது. அவசரப்பட்டு காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்ந்ததால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.’’ எனக் கூறினார்.
இதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ம.பி.யில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago