கரோனா சிகிச்சையில் முழு குணமடைந்த இத்தாலிய சுற்றுலாப் பயணி: ஐரோப்பாவைவிட பாதுகாப்பாக உணர்ந்ததாக நெகிழ்ச்சி

By என்.சுவாமிநாதன்

கரோனா தொற்றுக்கு ஆளாகி கேரளாவில் சிகிச்சையில் இருந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி முழுமையாக குணமடைந்தார். அவரை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மருத்துவமனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ராபர்ட்டோ டொனேசோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக கரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவிடம் நன்றி தெரிவித்துப் பேசினார் டொனேசோ. அப்போது அவர், “ஐரோப்பாவைவிட கேரளாவில் பாதுகாப்பாக உணர்ந்தேன்” என்று சொல்ல அமைச்சர் ஷைலஜா நெகிழ்ந்து போனார்.

மருத்துவமனையில் இருந்து ராபர்ட்டோ டொனேசோ கிளம்பும்போது, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும், டொனேசோவுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரும் அவரை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டொனேசோ, “கேரளம் எனது இரண்டாவது வீட்டைப் போல இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. இந்தக் கடவுளின் தேசத்துக்கு மீண்டும் நான் வருவேன்.

எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும், சேவை செய்து கவனித்த செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் அடிமனத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு எனக்குக் கிடைத்த சிகிச்சையின் தரமும், உணவுகளும், மருத்துவப் பராமரிப்பும், கேரளம் குறித்த உயர்வான மதிப்பீட்டை என்னுள் உருவாக்கியுள்ளது” என்று சொன்னார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “ராபர்ட்டோ டொனேசோ, திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் கேரள அரசு செய்துள்ளது. அங்கிருந்து அவர், இத்தாலிய அரசு அனுப்பி வைக்கும் சிறப்பு விமானத்தில் இத்தாலி செல்வதாக திட்டமிடப் பட்டுள்ளது. கேரளத்தில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று சொந்த நாட்டுக்குத் திரும்பும் கடைசி நோயாளி இவர்தான்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்