தனது தந்தை ஆனந்த் சிங்கின் (வயது 89) இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மார்ச் 15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
» டெல்லியில் பிசா டெலிவரி நபருக்கு கரோனா தொற்று: தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை
நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். அவரது இறுதிசடங்குகள் நாளை நடைபெறும் எனத் தெரிகிறது. அவரது சொந்த ஊரி்ல இறுதி சடங்குகள் செய்யப்படவுள்ளது.
இந்தநிலையில் தனது தந்தை ஆனந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago