மத்திய சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறியதாவது:
மார்ச் மாத மத்தியில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் மூலம் ஏராளமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.
நாட்டில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 4,291 பேர் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அல்லது அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது கரோனா பாதித்தவர்களில் 29.8 சதவீதமாகும்.
ஜமாத்தில் கலந்துகொண்டவர்கள் மூலம் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா பரவியுள்ளது. தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 1,992 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago