கரோனாவுக்கு இந்தியாவில் பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது; 500க்கும் அதிகமான உயிரிழப்பு: மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மோசம்

By ஏஎன்ஐ


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் நீடித்த போதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து 15 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 974 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,230 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 201 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 211 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை70 ஆகவும், குஜராத்தில் நேற்று 12 பேர் பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 18ஆகவும், டெல்லியில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உள்ளது .தமிழகம், ஆந்திராவில் தலா 15 பேரும், உயிரிழந்துள்ளனர். கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் தலா 14 பேரும், பஞ்சாப் 13 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும் ராஜஸ்தானில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட், பிஹாரில் தலா 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 3,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குணமடைந்தோர் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 365 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 1,351 பேரும், தெலங்கானாவில் 809 பேரும், கேரளாவில் 400 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 1,407 பேரும், கர்நாடகாவில் 384 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 1,376 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 341, மேற்கு வங்கத்தில் 310, பஞ்சாப்பில் 202, ஹரியாணாவில் 225, பிஹாரில் 86, அசாமில் 35, உத்தரகண்ட்டில் 42, ஒடிசாவில் 61, சண்டிகரில் 23, சத்தீஸ்கரில் 36, லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 14 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 39 பேர், புதுச்சேரி7 பேரும்,மேகலாயாவில் 11 பேர், ஜார்க்கண்டில் 34 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்