கரோனா வைரஸுடன் போராடும் முன்னணி வீரர்களுக்காக மத்தியப்பிரதேசம் தினசரி 10,000 பிபிஇ எனப்படும் உடல் பாதுகாப்புக் கவசக் கருவிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மேலும் 50 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் கோவிட் 19க்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அவர்களுக்கான சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தாக வேண்டும். கரோனா வைரஸ் நோயாளிகளுடன் நேருக்குநேர் நின்று சிகிச்சை செய்ய இன்றியமையாத கவசமாகப் பயன்படும் பிபிஇ எனப்படும் உடல் பாதுகாப்புக் கவசங்கள் கருவிகள் மத்தியப் பிரதேசத்தில் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்தியப் பிரதேசத்தின் மாநில கூடுதல் (சுகாதார) தலைமைச் செயலாளர் முகமது சுலேமான் சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநில கூடுதல் (சுகாதார) தலைமைச் செயலாளர் முகமது சுலேமான் கூறியதாவது:
கரோனா சிகிச்சையில் பிபிஇ கிட் ஒரு மிக முக்கியமான அம்சம் ஆகும். நாங்கள் மத்தியப் பிரதேசத்திலேயே பிபிஇ கிட் தயாரிப்புகளை உறுதிசெய்துள்ளோம்.
இந்தூருக்கு அருகிலுள்ள பிதாம்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தினமும் 10,000 பிபிஇ கிட்களை உருவாக்கி அவற்றை மக்களுக்கு வழங்குகிறோம். இதுவரை ஒரு லட்சம் பிபிஇ கிட்களை விநியோகித்துள்ளோம்,
மத்திய பிரதேசத்தில் கோவிட் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. யாரிடமும் ஒரு பைசா கூட வசூலிக்கப்பட மாட்டாது.
மாநில அரசு 9.5 லட்சத்துக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் போதுமான அளவு N-95 முகக்கவசங்களை வைத்துள்ளது.
இவ்வாறு மத்தியப் பிரதேச மாநில கூடுதல் (சுகாதார) தலைமைச் செயலாளர் முகமது சுலேமான் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago