ஹரியாணாவிற்கு லாரியில் செல்ல முயன்ற 37 கூலித் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு: கரோனா தனிமை முகாம் அனுப்பியது டெல்லி போலீஸ்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் இருந்து அண்டை மாநிலமான ஹரியாணாவிற்கு செல்ல முயன்ற 37 தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது. அனைவரையும் பிடித்த டெல்லி காவல்துறை, கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டி தனிமை முகாமிற்கு அனுப்பி வைத்தது.

நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு டெல்லியின் ஓக்லா அருகே ஒரு லாரி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் சோதனை செய்த போது 37 தொழிலாளர்கள் அண்டை மாநிலமான பல்வல் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், 37 பேர் மீதும் அரசு உத்தரவை மீறியதாக ஐபிசி பிரிவு 188, 269 –ன்படி கொடூர நோய் பரவ முயற்சி ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெளிமாநிலத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும் ஹரியாணாவாவின் பல்வலில் தங்கி இருப்பவர்கள், ஓக்லாவின் காய்கறி சந்தையில் பணியாற்றுபவர்கள் எனத் தெரிகிறது.

இதேபோல், டெல்லியின் சவுத் எக்ஸ் பகுதியில் டொயோட்டா இன்னோவா வாகனத்தில் 7 தொழிலாளர்கள் சென்ற போது பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் தம் சொந்த ஊரான பீஹார் மாநிலம் வைஷாலிக்கு வரை செல்ல ரூ.37,000 வாடகைப் பேசி இருந்தனர்.

இவ்விரு சம்பவங்களில் பிடிபட்டவர்களை டெல்லி போலீஸார் புறநகர் பகுதியில் உள்ள கரோனா தனிமை முகாமிற்கு அனுப்பு வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு உகந்த வகையில் வைக்கப்பட உள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்