கரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் 47 ஆக அதிகரிப்பு; எந்தெந்த வயதினர் அதிகமாகப் பலியாகினர்?- மத்திய அரசு தகவல்

By பிடிஐ

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 23 மாநிலங்களில் 47 ஆக அதிகரித்துள்ளது. இதில் புதுச்சேரியின் மாஹி, கர்நாடகாவின் குடகு ஆகியவையும் அடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்தியஅரசும் மாநில அரசுகளும் தீவிரமாக பணியாற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது

மாலை 5 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை488 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை 2015 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறையின் இணைச்செயலாளர் லாக் அகர்வால் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 991 பேர் ஆளாகியுள்ளார்கள், 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 14ஆயிரத்து 378 பேர் கராோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 4,291 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

அதாவது 29.8 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டோடு அதாவது அந்த குறிப்பிட்ட இடத்தோடு தொடர்புடையவர்கள். தமிழகத்தி்ல் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் குறிப்பிட்ட இடத்திலிருந்து வந்தவர்கள், டெல்லியில் 63 சதவீதம், தெலங்கானாவில் 79 சதவீதம், உத்தரப்பிரதேசத்தில் 59 சதவீதம், ஆந்திராவில் 61சதவீதம் பேர் குறிப்பி்ட்ட இடத்துக்கு சென்றதால் பாதிக்கப்பட்டவர்கள்.

சில ஆறுதலாக விஷயங்களும் நடந்துள்ள கடந்த 14 நாட்களாக 22 மாவட்டங்களில் யாரும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை ஒட்டுமொத்தமாக 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக புதிதாக யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதில் கடந்த 28 நாட்களாக கர்நாடகாவில் குடகு, புதுச்சரேரியின் மாஹியி்ல் ஒருவர் கூட கரோனாவில் பாதிக்கப்படவில்லை

கரோனாவை வைரஸ் மூலம் இந்தியாவில் இறந்தவர்கள் விகிதம் என்பது 3.3 சதவீதம் மட்டுமே. வயது அடிப்படையில் ஆய்வு செய்தததில் 0-முதல் 45 வயது வரை 14.4 சதவீதம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்

45 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் உயிரிழப்பு 10.3 சதவீதமாகவும், 60 முதல் 75 வயதுவரை உள்ளவர்களின் மரணம் 33.1 சதவீதமாகவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கல் உயிரிழப்பு 42.2 சதவீதமாகவும் இருக்கிறது. கரோனா வைரஸிலிருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 1,992 பேர் குணமடைந்துள்ளனர். இது சதவீதத்தின் அடிப்படையில் 13.85 விகிதம்தான்.

கரோனாவை வைரஸுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கப்படும் மலேரியா மாத்திரை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கினால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா என்பது குறித்த ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
இவ்வாறு லாக் அகர்வால் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்