மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தில் குழந்தை பெற்ற பெண்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேற்கு டெல்லியைச் சேர்ந்த மினி குமார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆம்புலன்ஸ் உதவி கோரினர்.
அங்கிருந்த பெண் போலீஸ் சுமன், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவசரநிலையை உணர்ந்த உயரதிகாரி
கள், அந்தப் பெண்ணை போலீஸ்வேனில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டனர். இதன்படி கர்ப்பிணி மினிகுமார், போலீஸ் வேனில் கயாலாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் வேனிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. உடன் சென்ற பெண் போலீஸும், உறவினர்களும் சேர்ந்து மினி குமாருக்கு பிரசவம் பார்த்தனர்.

போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸில் விரைந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மினி குமாருக்கும் குழந்தைக்கும் முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல் துணை ஆணையர் தீபக் புரோஹித் கூறும்போது, "கர்ப்பிணியின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்
வாகன உதவி கோரி போலீஸ்நிலையத்தை அணுகினர். அவர்களுக்காக எங்களது போலீஸ் வேனை அனுப்பினோம். மருத்
துவமனையை நெருங்கும் வேளையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்துஉதவிகளையும் செய்வோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்