ஊரடங்கு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாகும் அவகாசம் 6.2 நாட்களாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நோயின் தாக்கம் ஏற்படுத்தும் வேகம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது:
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அகர்வால் கூறியதாவது:
ஊரடங்கு அமலுக்கு முன்பு இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும் அவகாசம் 3 நாட்களாக இருந்தது. கடந்த ஏழு நாட்களில், நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் அவகாசம் 6.2 நாட்களாக மாறியுள்ளது.
» கரோனா தொற்று; 30 நிமிடங்களில் துல்லியமான பரிசோதனை: மத்திய அரசு ஆலோசனை
» சந்தைகளில் மக்கள் கூடினால் ஊரடங்கு விதிகள் கடுமையாகும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை
19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கேரளா, உத்தரகாண்ட், ஹரியாணா, லடாக், இமாச்சலப் பிரதேசம், சண்டீகர், புதுவை, பிகார், ஒடிசா, தெலங்கானா, தமிழகம், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா நோய் பாதிப்பு இரட்டிப்புக்கான அவகாசம் அதிகரித்து வருகிறது. தேசிய சராசரியைவிட இது அதிகமாக உள்ளது. அதாவது, நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமை ஓரளவுக்கு குறைந்துள்ளது.
நோய் பாதிப்பு விகிதாச்சாரம் 2020 ஏப்ரல் 1 தேதியின்படி 1.2 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய காலத்தில் (மார்ச் 15 முதல் மார்ச் 31 வரையில்) அது 2.1 என்று இருந்தது. அதாவது நோய் பரவும் விகித வளர்ச்சியில் 40 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago