கரோனா வைரஸின் முழு-மரபணு வரிசையைக் கண்டறியும் ஆராய்ச்சியை சிஎஸ்ஐஆர் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB), மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (IGIB) ஆகியவற்றுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கழகத்தின் (CSIR) மேலும் ஒரு நிறுவனம் புதிய கரோனா வைரஸின் முழு-மரபணு வரிசையைக் கண்டறியும் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது.
சண்டிகரை தளமாகக் கொண்ட நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் (IMTech) வைரசினுடைய மரபணு வரிசையைக் கண்டறியப் பெரியளவிலான ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளது.
முழு-மரபணு வரிசைமுறை என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்துடைய மரபணுவின் முழுமையான DNA வரிசையை கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். CSIR-இன் IMTech நிறுவனம் நுண்ணுயிர் மற்றும் மரபணு ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால், மருத்துவ மாதிரிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட SARS-Cov-2 RNA மரபணுவின் வரிசைமுறையைக் கண்டறியும் ஆய்வை மேற்கொள்ளும்.
மரபணு வரிசைகளை வெவ்வேறு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் வகையில், 2008 –இல் உலக சுகாதார அமைப்பால், சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட பொதுத்தளத்தில் (GISAID) அனைத்து ஃப்ளூ காய்ச்சல் தரவையும் பகிர்வதற்கான உலகளாவிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதில் இதுவரை சர்வதேச அளவில் 9000 மாதிரிகள் வரிசைப்படுத்தும் ஆய்வு நடைப்பெற்றுள்ளது. இந்த வரிசைப்படுத்தும் முறையிலிருந்து பெறப்பட்ட மரபணு மூலமாக, கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையை செய்து, அதற்கான மருந்தையும் எளிதில் கண்டறிய முடியும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago