பணப்புழக்கம் அதிகரிக்கும், எளிதில் கடன் கிடைக்கும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பணப்புழக்கம் அதிகரிக்கும், எளிதில் கடன் கிடைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சூழலை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

2021-22 நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவி்த்தார். மேலும் அவர் கூறுகையில் ‘‘ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வங்கிகளில் ரொக்கப்பணத்தின் கையிருப்பு அதிகரித்துள்ளது.

நபார்டு வங்கி, இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீட்டுவசதி வங்கி போன்றவற்றுக்கு பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
கடனுக்கான வட்டிவீதத்தில் எந்த வீதத்திலும் மாற்றமில்லை, ஆனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும். மக்களிடையே பணப்புழக்கம் மேலும் மேம்படும்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அனைத்து மாநிலங்களும் கடன் பெறுவதற்கான வழிகள் அதிகரிக்கும். சிறு வணிகம், சிறு, குறு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பெரிதும் பயனளிக்கும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்