உ.பி.யில் மருத்துவப் பணியாளர்கள் மீது கல்வீச்சு

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் கரோனா தொற்று இருப்பவர்களாக சந்தேகிக்கப்படுவோரை அழைத்துச் சென்ற போலீஸார் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று காலை ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரதுகுடும்பத்தினரை தனிமைப்படுத்துவதற்காக டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றில் அங்கு சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக போலீஸார் சிலரும் அவர்களுடன் சென்றனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்ற மருத்துவப் பணியாளர்கள், அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியேவந்தனர். அப்போது அங்கு திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மீதும், மருத்துவப் பணியாளர்கள் மீதும் கற்களை வீசிதாக்குதல் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக வந்த போலீஸாரையும் அவர்கள் கடுமையாக தாக்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவல்துறையினர், அங்கு உடனடியாக வந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மொராதாபாத் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

38 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

மேலும்