ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், கனிகிரி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் யாதவ். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த இவர், அண்மையில் காரில் பெங்களூருவுக்கு சென்றார். ஊரடங்கு காரணமாக அவர் அங்கேயே தங்க நேர்ந்தது. ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் சொந்த ஊர் திரும்பலாம் என அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு விட்டது.
இதனால் மதுசூதன் யாதவ் நேற்று தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 36 பேருடன் 5 கார்களில் ஆந்திரா நோக்கி புறப்பட்டார். நேற்று மதியம் அவர் ஆந்திர எல்லையில் சீகல பைலு சோதனைச் சாவடி அருகே வந்தார். போலீஸார் கார்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, தங்களை ஆந்திராவுக்குள் அனுமதிக்க வேண்டும் என போலீஸாருடன் எம்எல்ஏ வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலின் பேரில் போலீஸ் உயரதிகாரிகள் அங்கு வந்தனர்.
அவர்கள், எம்எல்ஏவிடம் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான அரசின் உத்தரவுகளை விளக்கி கூறி அனைவரையும் திருப்பி அனுப்பினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago