கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு லாக் டவுனை 2-வது கட்டமாக மே 3-ம் தேதி வரை நீட்டித்து பிறப்பித்த உத்தரவால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த 39 லட்சம் டிக்கெட்டுகளை ரயில்வே துறை ரத்து செய்கிறது.
கரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 25-ம் தேதி கொண்டு வந்தரர். இதனால் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலையிழந்து வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
முதல் கட்ட லாக் டவுன் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மக்கள் தங்கள் பயணித்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், ரயில்வே துறை சார்பில் ரயில்கள் இயக்குவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
ஆனாலும் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிரதமர் மோடி லாக் டவுனை மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து நேற்று அறிவித்தார்.
» கரோனாவின் கைங்கர்யம்: உலகப் புகழ்பெற்ற கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா முதல் முறையாக ரத்து
இதனால் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை பயணிகள் முன்பதிவு செய்திருந்த 39 லட்சம் டிக்கெட்டுகளை ரயில்வே துறை ரத்து செய்கிறது. அந்த பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்யத் தேவையில்லை, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் தானாக திருப்பி முழுமையாக அனுப்பப்படும் என ரயில்வே துறை தெரவித்துள்ளது. மேலும் தேதி குறிப்பிடும்வரை பயணிகள் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது
மே 3-ம் தேதி வரை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று மும்பை பாந்த்ராவில் கூடி போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago