இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர், 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர்எண்ணிக்ைக 11 ஆயிரத்தைக் கடந்து 11,439 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தங்கி 9,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,305 பேர் குணமடைந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை மாலை வரை நேர்ந்த 24 உயிரிழப்புகளில் 18 மகாராஷ்டிராவிலும், டெல்லி, குஜராத்தில் தலா 2 உயிரிழப்பும், தமிழகம், கர்நாடகாவில் தலா ஒரு உயிரிழப்பும் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மோசமான வகையில் பாதிப்பும்,உயிரிழப்பும் இருந்து வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 178 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில்18 பேர் உயிரிழந்துள்ளனர்.
» ஊரடங்கு காரணமாக வாரணாசியில் சிக்கிக்கொண்ட 127 தமிழர்கள் 3 பேருந்தில் சென்னை புறப்பட்டனர்
அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 7 பேர் உயிரிழந்ததால் 50 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவதாக குஜராத்தில் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 2 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப், தமிழகத்தில் தலா 12 பேரும் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலதில் 10 ேபரும், ஆந்திராவில் 9 பேரும், மேற்கு வங்கத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் 5 பேரும், ஜம்மு காஷ்மீரில் 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணா, கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 2,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 300 பேருக்குமேல் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 259 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 81 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 969 பேரும், தெலங்கானாவில் 624 பேரும், கேரளாவில் 387 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 730 பேரும், கர்நாடகாவில் 260 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 650 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 278, மேற்கு வங்கத்தில் 213, பஞ்சாப்பில் 176, ஹரியாணாவில் 199, பிஹாரில் 66, அசாமில் 32, உத்தரகாண்ட்டில் 37, ஒடிசாவில் 60, சண்டிகரில் 21, சத்தீஸ்கரில் 31, லடாக்கில் 17 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 33 பேர், புதுச்சேரியில் 7 பேர், ஜார்க்கண்டில் 27 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago