4 மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில் கரோனா வைரஸ்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

நாட்டின் 4 மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில் 2 மாதிரியில் கரோனா வைரஸை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம்தான் பரவியது என்று சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிந்துள்ளனர். இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ஐசிஎம்ஆர்) சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவின் 4 மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடம் சோதனை நடத்தினர்.

வவ்வால்களின் தொண்டையில் இருந்து எடுத்த மாதிரியை சோதனை செய்தபோது அதில் 2-ல் மட்டும் கரோனா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது என ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேரளா, இமாச்சலபிரதேசம், புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டது. இதில் 2 மாதிரிகளில் கரோனா வைரஸ் இருந்தது. கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில், கரோனா வைரஸ் தென்படவில்லை என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்