ஒவ்வொரு மலையாள மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். இதன்படி மேஷ மாதத்துக்காக நேற்றுமுன்தினம் நடை திறக் கப்பட்டது. மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்தார்.
கரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியைப் பின் பற்றும் வகையில் கருவறையில் மூன்று பேர் மட்டுமே அனும திக்கப்பட்டனர். தந்திரி கண் டரரு மகேஷ் மோகனரு, மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி உட்பட குறிப்பிட்ட ஊழியர்கள் மட்டுமே வந்தனர்.
நேற்று அதிகாலை கணபதி ஹோமம், அனைத்து வகையான பழங்கள் வைத்து விஷூகனி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம், உச்சி பூஜை, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் இடம் பெற்றன. படி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறவில்லை.
வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மீண்டும் மாலை 5 மணிக்கு திறக் கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
தற்போது பக்தர்கள் வராததால் காலை 10 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடை அடைக்கப்பட்டது. வழிபாட்டு நேரம் சுமார் 5.30 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
பிரசாத விற்பனைக் கடைகள் மற்றும் பம்பைப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வரும் 18-ம் தேதி இரவு 7.30 மணிக்கு கோயில் நடைசாத்தப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago