சானிட்டைசர்ஸ்;  மதுபான ஆலைகள் முழுஅளவில் இயங்க அனுமதி: ஹரியாணா அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சானி்ட்டைசர்ஸ் தயாரிக்க பயன்படும் ஆல்கஹால் அதிகமாக தேவைப்படுவதால் மதுபான ஆலைகளை முழுமை செயல்பட அனுமதி தரப்படும் என ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இதனால் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுகாதாரத்துறைக்கு தேவையான பொருட்கள் பெருமளவு தயாாிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சானிட்டடைசர்ஸ் மற்றும் முககவசங்கள் அதிகமாக தேவைப்படுவதால் அதிகஅளவு தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது:

ஹரியாணா மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் சானிட்டைசர்ஸ் கிருமி நாசினி தேவை அதிகம் உள்ளது. இதனால் ஹரியாணா மாநிலத்தில் உள்ள மதுபான ஆலைகள் ஒரளவு இயங்கி வருகின்றன.

இங்கு கிருமிநாசினி தயாரிக்க தேவைப்படும் ஆல்ஹகால் பெருமளவு தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இது நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேவை இன்னமும் இருப்பதால் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான ஆலைகளையும் இயங்க அனுமதிப்பது என முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்