7-ம் தேதி ஆயிரம் 14-ல் 2,000; அதிவேகமாக அதிகரிப்பு; மகாராஷ்டிராவை மிரட்டும் கரோனா: மேலும் 121 பேருக்கு பாதிப்பு

By பிடிஐ

கரோனா வைரஸால் நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலம்தான். அங்கு இன்று காலை நிலவரப்படி 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது. 160 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 338 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி ஆயிரம் நோயாளிகளை எட்டிய மகாராஷ்டிராவில் அடுத்த 7 நாட்களில் ஆயிரம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் மட்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மும்பையில் 9 பேரும், மிரா-பையாந்தர் பகுதி, பிம்ரி சிந்தாவத் பகுதியில் தலா ஒருவரும் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் நீரிழிவு, ஆஸ்துமா, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

இன்று காலை கணக்கெடுப்பின்படி, மேலும் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மும்பையில் புதிதாக 92 பேருக்கும், நவி மும்பையில் 13 பேருக்கும், தானே நகரில் 10 பேருக்கும், வாசை விரார் பகுதியில் 5 பேருக்கும், ராய்காட் பகுதியில் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் மும்பை அருகே இருக்கும் மிகப்பெரிய குடிசை வாழ் பகுதியும், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தாராவி பகுதி மிகவும் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியாகும். இங்கு இன்றுகாலை 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முஸ்லிம் நகர், கல்யாண்வாடி, ஜனதா சொசைட்டி, ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதுவும் மும்பை எண்ணிக்கையில் சேரும். இதுவரை தாராவியில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்