கரோனா; அரசு நிதியுதவி அளிப்பதாக இணையதளத்தில் மோசடி: உ.பி.யில் 10 வழக்குகள் பதிவு 

By ஆர்.ஷபிமுன்னா

கரோனா வைரஸின் பேரில் அரசு பண உதவி அளிப்பதாகக் கூறி இணையதளம் வழியாகப் பொதுமக்களிடம் மோசடி நடைபெற்று வருகிறது. இதன் மீது உத்திரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவாகி உள்ளன.

’லாக் டவுன்’ காலங்களின் பலனாக இணையதளங்களில் சைபர் கிரிமினல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதில் பொதுமக்களின் கைப்பேசிகளில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பேசுவதாகக் கூறி தொடர்பு கொள்கின்றனர்.

இணையதள போன் மூலமாக தொடர்பு கொண்டவர்கள் பொதுமக்களிடம், அரசு ரூ.5000 ஒவ்வொருவர் கணக்கிலும் செலுத்த இருப்பதாகக் கூறுகின்றனர். இதில் ஏமாறுபவர்களிடம் கணக்கு விவரங்களை பெற்று அதில் உள்ள தொகை முழுவதையும் திருடியுள்ளனர்.

இன்னும் சிலரிடம் ரூ.5000 கணக்கில் அளிக்க வரிப்பணம் முன்கூட்டியே செலுத்த வேண்டும் எனக் கூறி ரூ.1500 பெற்றுள்ளனர். இதுபோல், பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றி பெறப்பட்டுள்ளன.

இந்த மோசடி நடவடிக்கையில் சிக்கிய சிலர் மட்டுமே உ.பி.யின் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளனர். இந்தவகையில், லக்னோ, வாரணாசி, வைரைச், அலகாபாத், ஆசம்கர், மாவ், புலந்த்ஷெஹர், முராதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் பொதுமக்கள் ஏமாந்து செலுத்திய வங்கி கணக்குகளின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மோசடிக்கார சைபர் கிரிமினல்களை கைது செய்யும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைபர் கிரிமினல்களின் மோசடி குறித்த தகவல்களுடன் உ.பி. காவல்துறை சார்பில் சுவரொட்டிகள் தயாராகி வருகிறது. இதை மாநிலம் முழுவதிலும் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்