'மோடி அங்கிள் சொல்லியிருக்காரு' - சமூக விலகலை ஆதரித்துப் பேசும் சிறுவன்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

"வெளியே செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் மோடி அங்கிள் சொல்லியிருக்கிறார்" என்று தன் அம்மாவிடம் சிறுவன் ஒருவன் பேசும் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சமூக விலகலைக் கடைப்பிடிக்கச் சொல்லி பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். கரோனா விழிப்புணர்வு தொடர்பாக இந்திய திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், இணையத்தில் சில சிறுவர்கள் கரோனா குறித்து பேசும் வீடியோ அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

அதன்படி இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு அம்மா தனது மகனிடம், "ஓகே, நாம் தயாராகிவிட்டோம், வெளியே செல்வோமா?" என்று கேட்க, அதற்கு அவரது மகன், "இல்லை தயாராகவில்லை" என்கிறான்.

"இப்போதுதானே நீ தயார் என்று சொன்னாய்" என்று அம்மா கேட்க, "நான் தயாராகவில்லை. இது ஊரடங்கு. மோடி அங்கிள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்" என்று அழுதுகொண்டே பதிலளிக்கிறான்.

"பிறகு என்ன செய்யலாம்" என்று அம்மா கேட்க, "நாம் வீட்டிலேயேதான் இருக்க வேண்டும்" என்று சொல்கிறான். மீண்டும் அவன் அம்மா, "பரவாயில்லை, வெளியே சென்றுவிட்டு வரலாம்" என்று சொல்ல, அதற்கு, "அரசாங்கம் என்னை எடுத்துக் கொள்ளும். ஏனென்றால் மோடி அங்கிள் என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்" என அப்பாவித்தனமாகச் சொல்கிறான்.

பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் இந்த சிறுவனின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அனுபம் கேர், பிரதமர் மோடியை டேக் செய்திருக்கிறார். மேலும், "என் நண்பர் இந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார். கண்டிப்பாக எல்லோரும் பகிர வேண்டிய ஒன்று. இந்தச் சிறுவன் ஊரடங்கை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுகிறான். ஏனென்றால் மோடி அங்கிள் சொன்னார் என்று. இவனது அழகையும், அர்ப்பணிப்பையும் கண்டிப்பாக ரசிப்பீர்கள். நன்றி என் இளம் நண்பனே" என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஹரிஷ் ஷங்கரும் இந்த வீடியோவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்