டேராடூன்
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
இதுவரை மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகளில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago