பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?

By செய்திப்பிரிவு

கரோனாவை தடுக்கும் வகையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. 14-ம் தேதியான நாளை முழு அடைப்பு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் வரும் 30-ம் தேதி வரை முழு அடைப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். , காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதுபற்றிய அறிவிப்பை அவர் வெளியடலாம் எனவும் தெரிகிறது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் அதேசமயம் பொருளாதார நடவடிக்கைகள பாதிக்கப்படாமல் தொழில் நிறுவனங்கள் சில நடைபெறவும், மக்கள் வருவாய் இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் சில விதிவிலக்கு மற்றும் அறிவிப்புகளும் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்