அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திங்கள்கிழமை முதல் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தவறினால் அவர்களுக்கு ரூ .5,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கொடிய நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவிததார்.
உலகெங்கும் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 8536 பேரை பாதித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 273. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 909 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது; 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை 19 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதுவரை நகரத்தில் மட்டும் மொத்தம் 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவி உள்ளது. இதன்மூலம் குஜராத்தில் கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 487 ஆக அதிகரித்துள்ளது. நகரில் மொத்தம் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து அகமதாபாத்தில் முகக்கவசம் அணிவது நாளை முதல் (திங்கட்கிழமை) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது.
"திங்கள்கிழமை காலை 6 மணி முதல், அகமதாபாத் நகர நகராட்சி எல்லையில் உள்ள அனைவரும் பொது இடங்களில் வெளியே செல்லும்போது கட்டாயமாக முகமூடி அணிய வேண்டியிருக்கும். முகமூடிகள் இல்லாமல் காணப்படுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை டெபாசிட் செய்யத் தவறியவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படும். கொடிய நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சந்தையில் கிடைக்கும் முகமூடிகளை மக்கள் அணியலாம் அல்லது துணியிலிருந்து தயாரிக்கலாம், அல்லது மூக்கு மற்றும் வாயை மறைக்கும் வகையில் ஒரு கைக்குட்டையை கூட கட்டிக் கொள்ளலாம்.
இந்த உத்தரவு பொது இடங்களில், வணிகர்கள், கடைக்காரர்கள் மற்றும் பலர் உட்பட அனைவருக்கும் பொருந்தும், மேலும் இந்த உத்தரவுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago