ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊரடங்கு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது என எங்களிடம் பிரதமர் மோடி கூறினார். மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். எனவே 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக அடுத்த ஓரிரு தினங்களில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் எனவும் எங்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
இவ்வாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago