நாடுமுழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார்: கேஜ்ரிவால் ட்வீட்

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளது சரியான நடவடிக்கை என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து கேஜ்ரிவால் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘நாடுமுழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளது சரியான நடவடிக்கை. மற்ற பல வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டால் இன்று இந்தியாவின் நிலைமை மேம்பட்டே இருக்கிறது.

ஏனெனில் ஊரடங்கு நடவடிக்கையை நாம் முன்னதாகவே தொடங்கி விட்டோம். இதனை நாம் நிறுத்தி விட்டால் நமக்கு கிடைத்த பலன்கள் பறிபோய் விடும். கிடைத்த பயனை நாம் முழுமையாக பெற வேண்டுமென்றால் ஊரடங்கு நடவடிக்கையை தொடருவதே ஒரே வழி. ’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்