கரோனா; 3டி தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான முகத்தடுப்புகள்: வீட்டிலேயே தயாரிக்கும் 20 வயது  மாணவர் 

By செய்திப்பிரிவு

கரோனா; 3டி தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான முகத்தடுப்புகள்: வீட்டிலேயே தயாரிக்கும் 20 வயது டெல்லி மாணவர்

புதுடெல்லி

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு அதிகஅளவில் முககவசம், கிருமிநாசினி போன்றவை தேவைப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே தனிநபர்கள் பலரும் புதுமையான முறையில் இதனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லியைச் சேர்ந்த 20- வயது மாணவர் உதித் காக்கரும் சாதனை புரிந்துள்ளார். வீட்டிலேயே 3- டி பிரிண்டர் உதவியுடன் கிருமி பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முகத் தடுப்புகளை தயார் செய்துள்ளார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அவர் வீட்டில் உள்ள 3டி பிரிண்டர் உதவியுடன் இந்த சாதனையை செய்துள்ளார். அவரது தாய் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தேவையான முகத்தடுப்புகளை முதலில் அவர் தயார் செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து பிற சுகாதார ஊழியர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த முகத்தடுப்புகளை அவர் தயாரித்து வருகிறார்.

இதுகுறித்து உதித் காகர் கூறுகையில் ‘‘எனது தாய் ஒரு மருத்துவர் அவருக்காக தான் இதனை முதலில் தயாரிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு மற்றவர்களுக்காக, குறிப்பாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்காக தயாரித்து வருகிறேன். ஒரு முகத்தடுப்பை தயாரிக்க 1 முதல் 1.5 மணிநேரம் ஆகிறது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்