மாநில முதல்வர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம், நான் தயாராக இருக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
» முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியிடம் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்திய 3 விஷயங்கள்
» ஊரடங்கை மீறி நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து; பாஜக கவுன்சிலர் கைது: மும்பை போலீஸ் நடவடிக்கை
இதுமட்டுமின்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர் பேசுகையில் ‘‘24 மணிநேரமும் நான் தயாராக இருக்கிறேன். மாநில முதல்வர்களும் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம். நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோளோடு தோள் கொடுத்து நிற்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை விரட்ட வேண்டும்.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago