பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் லாக்-டவுன் நீட்டிப்பு உள்ளிட்ட விவகாரங்களை ஆலோசித்தனர், இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 3 விஷயங்களை பிரதமர் மோடியிடம் அறிவுறுத்தினார்.
இந்தியாவில் கரோனாவுக்கு 239 பேர் பலியாகியுள்ளனர், 7,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் நிபுணர்களும், உலகச் சுகாதார அமைப்பும் நாடுகள் விரைவில் லாக்-டவுன், ஊரடங்கை முடித்து விட்டால் அது கரோனா பரவலுக்கு வித்திட்டு பேராபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலும் பல நிபுணர்கள் லாக்-டவுன் நீட்டிப்புத் தேவை என்றே வலியுறுத்துகின்றனர், ஒடிசா, பஞ்சாப் ஏற்கெனவே லாக் டவுனை ஏப்ரல் 30ம்தேதி வரை நீட்டித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர்கள் மாநாட்டில் பிரதமரிடம் கேஜ்ரிவால் 3 முக்கிய விஷயங்களை வலியுறுத்தியுள்ளார்:
» ஊரடங்கை மீறி நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து; பாஜக கவுன்சிலர் கைது: மும்பை போலீஸ் நடவடிக்கை
லாக்டவுனை நீட்டிக்கும் முடிவை தேசிய அளவில் எடுக்க வேண்டும்.
மாநிலங்களிடம் லாக்-டவுன் முடிவுகளை விடுவதில் பயனில்லை, அது பலனளிக்காது.
லாக் டவுன் தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களைத் தவிர வேறு வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும்.
என்று வலியுறுத்தியுள்ளார்.
மாநாட்டில் பேசிய பல முதல்வர்களும் லாக்-டவுன் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago