நாடு முழுவதும் ஏப்ரல்- 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு? - மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை 

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. வரும் 14-ம் தேதியுடன் முழு அடைப்பு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒடிசாவில் வரும் 30-ம் தேதி வரை முழு அடைப்பு இருக்கும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். , காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்