கர்நாடகாவில் இந்து மகாசபா மாவட்டத் தலைவர் கைது 

By செய்திப்பிரிவு

கர்நாடகா மாநில சித்ரதுர்கா அகில பாரதிய இந்து மகாசபா தலைவர் எம்.குமாரசாமி கைது செய்யப்பட்டார்.

முகநூலில் மதரீதியான வன்முறையைத் தூண்டும் விதமான தகவலை வெளியிட்டதற்கான புகாரின் பேரில் போலீஸார் இவரைக் கைது செய்தனர்.

சித்ரதுர்கா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சையத் சதத் அளித்த புகாரில் குமாரசாமி, “கோத்ரா கலவரங்களை மீண்டும் கரசேவகர்கள் நடத்துவார்கள்” என்று நிலைத்தகவல் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 7ம் தேதி இந்தப் பதிவை இந்து மகாசபா தலைவர் குமாரசாமி பதிவிட்டுள்ளார் என்று புகார் எழுப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகமும் நாடும் கோவிட்-19 கொள்ளை நோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் சமூக ஒற்றுமையக் குலைக்கும் விதமாக குமாரசாமி இந்தப் பதிவை இட்டதாக சதத் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சித்ரதுர்கா போலீஸார் ஐபிசி-யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து குமாரசாமியை சித்ரதுர்கா காந்திநகரில் அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்