பஞ்சாப் மாநிலத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் 2 திருடர்களை அழைத்துச் சென்றனர், அந்த இரு திருடர்களும் இடைவிடாது இருமியதை அடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார், இதில் ஒரு திருடன் தப்பிச் செல்ல, ஒரு திருடனுக்கு கரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது.
இதனையடுத்து 7 போலீஸார் நீதிபதி ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த இரண்டு திருடர்களையும் மக்கள்தான் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிற்பாடு இவர்கள் நீதிபதி மனிகா சிங் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
ஆனால் கோர்ட்டில் இருவரும் பயங்கரமாக இருமவே நீதிபதி இருவருக்கு மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மருத்துவப் பரிசோதனைக்கு இட்டுச் சென்ற போது ஒரு திருடன் தப்பிவிட்டார், மற்றொருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
» ராஜஸ்தானில் மேலும் 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
இதனையடுத்து திருடர்களுடன் இருந்த 7 போலீசார், நீதிபதி மற்றும் இரண்டு குடிமக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
பஞ்சாபில் இதுவரை கோவிட்-19 காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago