ராஜஸ்தானில் மேலும் 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு

By பிடிஐ

ராஜஸ்தானில் சனிக்கிழமையன்று புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை ராஜஸ்தானில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

“இன்று புதிதாக 18 கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது, கோட்டாவில் 14 கேஸ்கள் பிகானர் மாவட்டத்தில் 4 பேர் ஆகியோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது, அனைவருக்கும் தொடர்பு வரலாறு உள்ளது” என்று கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

கோட்டாவில் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் கரோனா அதிகம் பாதித்த தெல்கார் மற்ரும் சந்திரகாட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பிகானரில் 4 புதிய தொற்றுக்கல் ஒரெ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் குடும்பத்தில் தான் கரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் மொத்த கரோனா வைரஸ் பாதிப்புகளில் 2 பேர் இத்தாலிய குடிமக்கள். 50 பேர் ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்டு ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் ராணுவ மருத்துவ முகாம்களில் உள்ளனர்.

மாநிலத்தில் ஜெய்ப்பூரில்தான் அதிக கரோனா வைரஸ் பாதிப்பு, மொத்தம் 221 பேருக்கு அங்கு கரோனா உள்ளது.

ராஜஸ்தான் மார்ச் 22 முதல் முழு அடைப்பில் உள்ளது, பெரிய அளவில் மருத்துவச் சோதனைகள், ஸ்க்ரீனிங்குகள் அங்கு நடைமுறையில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்