ஹரியாணாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துணைநிலை ஊழியர்களின் ஊதியத்தை அந்த மாநில அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.
ஹரியாணாவில் முதல்வர் மனோ கர் லால் கட்டார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறு கிறது. அந்த மாநிலத்தில் கரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர் பாக முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:
கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவி லியர்கள், மருத்துவ துணைநிலை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழி யர்கள், ஆய்வக ஊழியர்கள் ஆகி யோரின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுகிறது. கரோனா வைரஸ் பிரச்சினை ஓயும்வரை மருத்துவ பணியாளர்களின் இரு மடங்கு ஊதிய திட்டம் தொடரும். மேலும் அவரவர் பணிக்கு ஏற்ப ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு வசதி செய்து தரப்படும்.
மக்கள் நம்பிக்கை
கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களை மக்கள் நம்பு கின்றனர். மனித குலத்தை காப் பாற்ற அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுகின்ற னர். மருத்துவ பணியாளர்கள் மட்டு மன்றி காவலர்கள், அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய் வோர், உள்ளாட்சித் துறை ஊழி யர்கள், தன்னார்வலர்கள் ஆகி யோரும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் பங்கேற்றுள் ளனர். அவர்களுக்கு பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஹரியாணா காவல் துறை தலைவர் மனோஜ் யாதவா கூறும் போது," பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தால் அவர்களின் குடும் பத்துக்கு ரூ.30 லட்சம் இழப் பீடு வழங்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago