நாடு முழுவதும் முழு அடைப்பை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் முழு அடைப்பை நீட்டிப்பது குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு (லாக் டவுண்) அறிவித்தது. வரும் 14-ம்தேதியுடன் முழு அடைப்பு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்தது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 199 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், முழு அடைப்பை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒடிசாவில் வரும் 30-ம் தேதி வரை முழு அடைப்பு இருக்கும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் அறிவித்தார். இதேபோல, மற்ற மாநில முதல்வர்களும், காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் முழு அடைப்பை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முழு அடைப்பை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்துகிறார்.

நண்பர்களுக்கு உதவ தயார்

கரோனா வைரஸ் பாதிப்பை போக்க, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. உலக அளவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, இந்த மாத்திரை உட்பட உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. அந்தத் தடையை நீக்கி மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

அதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், பிரேசில், இஸ்ரேலுக்கும் மாத்திரை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நாடுகள் உட்பட 30 நாடுகள் இந்த மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரேசில் அதிபர் போல்சனரோ உட்பட பல நாட்டுத் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்