ஏப்ரலில் திருவிழாக்களுக்கு தடை; கடுமையாக பின்பற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

ஏப்ரல் மாதத்தில் அதிகஅளவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் கரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாக்குதலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அறிவிப்பை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எந்த சமூக மத கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் அனுமதிக்க வேண்டாம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளவாறு, ஊரடங்கு குறித்த விதிகளை அமல் செய்யும் கள ஏஜென்சிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கு, அமைதி மற்றும் பொது நல்லிணக்கத்தைப் பராமரிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. ஆட்சேபகரமான விஷயங்கள் எதுவும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பொது நிர்வாகத்தில் உள்ளவர்கள், சமூக, மத அமைப்புகள் மற்றும் குடிமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, இதுகுறித்த விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் விரிவாக சுற்றுக்கு விடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, கரோனா தாக்காமல் தடுப்பதில், அமைச்சகங்கள், இந்திய அரசுத் துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்கம் ஏற்கெனவே அனுப்பியுள்ளது.

இதன்படி எந்த மத கூட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படக் கூடாது. மேலும் அனைத்து சமூக, கலாச்சார, மத நிகழ்வுகள், கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் மீறப்பட்டால், பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான பொருத்தமான தண்டனை விதிகளின் கீழ், சட்ட அமலாக்க ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்