விலங்குகளுக்கும் கரோனா தொற்று: தெலங்கானாவில் முன்னெச்சரிக்கையாக ஆடுகளுக்கும் முகக்கவசம்

By ஐஏஎன்எஸ்

விலங்குகளுக்கும் கரோனா தொற்று பரவும் என்ற செய்திகள் வெளிவந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலங்கானா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஆடுகளுக்கும் முகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவாகி உலகமெங்கும் பரவி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வைரஸினால் ஏற்படும் இந்தக் கொடிய நோய்த் தொற்று தற்போது மனிதனை அடுத்து விலங்குகளுக்கும் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏற்படுவதில்லை எனக் கூறப்பட்டு வந்தநிலையில் முதன்முறையாக மனிதரிடம் இருந்து புலிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இச்செய்தி உலகமெங்கும் பரவியது. இதனை அடுத்து மத்திய அரசு, இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளையும் கண்காணிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இச்செய்தியை அறிந்த தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள கல்லூர் மண்டலில் வசிக்கும் ஏ.வெங்கடேஸ்வர ராவ், கோவிட் -19 இலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் தனது ஆடுகளுக்கு முகக் கவசங்களை அணிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில், "அமெரிக்காவில் கோவிட் -19 தொற்று ஒரு புலிக்கு ஏற்பட்டதைக் கேள்விப்பட்டேன். இதனையடுத்து நான் என் ஆடுகளின் வாயில் முகக் கவசங்களைக் கட்டத் தொடங்கினேன். நானும் முகக்கவசம் அணிந்திருப்பதால், வனப்பகுதியில் பயணம் செய்யும்போது என் ஆடுகளுக்கும் முகக்கவசம் அணிவிக்க முடிவு செய்தேன்.

நான் 20 ஆடுகளை வைத்திருக்கிறேன். விவசாயத்திற்காக எங்களுக்கு எந்த நிலமும் இல்லை என்பதால் எனது குடும்பம் இந்த ஆடுகளையே நம்பியுள்ளது. கரோனா வைரஸைப் பற்றி நான் கேள்விப்பட்ட பிறகு, நான் வெளியேறும்போதெல்லாம் முகக்கவசம் அணிந்துதான் செல்கிறேன்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்