கரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு அவசர அவசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு 4ஜி இணைய சேவை அளிக்க வேண்டுமென கோரிய மனு மீது மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், சமீபத்திய தகவல்கள், கோவிட் -19 பற்றிய கட்டுப்பாடுகள் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், ஜம்மு-காஷ்மீரில் மொபைல் இணைய தரவு சேவைகளை 4ஜி வேகத்திற்கு மீட்டெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவின் சார்பாக வழக்கறிஞர் ஷதன் பரசாத் ஆஜரானார்.
ஊடக வல்லுநர்கள் அதன் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் பரஞ்சோய் குணா தகுர்தா அறக்கட்டளை மூலம் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளதாவது:
» கரோனா தொற்று இல்லாத பேருந்து: கேரளாவில் முதன்முறையாக தொடக்கம்
» கரோனா நோயாளிகளின் மூச்சு திணறலை தடுக்க ஆக்ஸிஜன் வழங்கும் கருவி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயார்
“ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை இழக்கக்கூடாது. அதாவது பயனுள்ள மற்றும் விரைவான இணையம், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத கருவி ஆகும்.
மொபைல் இணைய வேகம் தடை செய்யப்படக் கூடாது. ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை அத்தகைய உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.
ஆகஸ்ட் 2019 இல் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில ஏழு மாதங்களுக்கும் மேலாக இணையம் தடை செய்யப்பட்டது. அவ்வகையில் இணையத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்க உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
அடிப்படைத் தேவை
சுகாதாரத்திற்கான உரிமையை உறுதி செய்வதற்கான ஒரு அத்தியாவசிய சேவை என்று கூறிய மத்திய அரசு, இணைய இணைப்புக்கான உரிமை மீண்டும் மீண்டும் அடிப்படைத் தேவை என்று தெரிவித்தது.
மார்ச் 24-ம் தேதி வெளியிடப்பட்ட லாக் டவுன் வழிகாட்டுதல்களில் “தொலைத்தொடர்பு, இணைய சேவைகள், ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கு விலக்கு அளித்தன. ஐடி மற்றும் ஐடி செயல்படுத்தப்பட்ட சேவைகள் [அத்தியாவசிய சேவைகளுக்கு] முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
காலாவதியான 2 ஜி வேகத்தில் இயங்கும் தடைசெய்யப்பட்ட இணைய சேவைகள், பெரும்பாலும் குறுஞ்செய்திகளைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்நேரத் தகவல்களின் சேவையை இது வழங்க முடியாது.
லாக் டவுன் காலத்தில் டெலிமெடிசின் முதல் கல்வியாளர்களுக்கு மருத்துவப் பொருட்கள் வழங்குவது வரை வர்த்தகம் மற்றும் தொழில்களின் ஆன்லைன் வீடியோ ஆலோசனைகள் அனைவருக்கும் மிக முக்கியமானவையாகும். இந்த நேரத்தில் பல்வேறு முக்கியமான துறைகளில் 4 ஜி அவசியம் ஆகும்.
ஜம்மு காஷ்மீரில் இல் 4 ஜி இணைய சேவையை மீட்டமைக்காதது, நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்ப மற்றும் தொற்றுநோய் குறித்த செய்திகளை நாட்டின் பிற பகுதியினர் தெரிந்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இங்கு மிகப்பெரிய விதிமீறல் நடக்கிறது''.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஒரு அமர்வு காணொலிக் காட்சி மூலம் அரசாங்கத்திற்கு முறையான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago