எம்எல்சி ஆகிறார் உத்தவ் தாக்கரே: 6 மாத கெடு முடிவடைவதால் முடிவு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் எம்எல்ஏவாக இல்லாத உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர் தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை. கூட்டணி அமைத் துப் போட்டியிட்ட சிவசேனா, பாஜக இடையே சுழற்சி முறையில் முதல் வர் பதவி என்ற பிரச்சினையால் கூட்டணி உடைந்தது.

இதை யடுத்து காங்கிரஸ், என்சிபி கட்சி களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்து பேசி வந்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப் பட்டது.

பின்னர் பாஜக சார்பில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் பதவியேற்றபோதும் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

அவர் தற்போது எம்எல்ஏவாக இல்லை. இதுவரை தேர்தலில் போட்டியிடாத அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ அல்லது சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக ஆக வேண்டும்.

தேர்தலை சந்திக்காமல் அதற்கு பதிலாக சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே முடிவு செய்தார். மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்தல் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தாக்கரே பதவியேற்று 5 மாதங்கள் ஆகியுள்ளதால் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் எம்எல்சி தேர்தலை நடத்த ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எம்எல்சி பதவிக்கு உத்தவ் தாக்கரே பெயரை முன்மொழியப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்