கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய் செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது.
இந்தப் பிரிவு கொவிட்-19 தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, உண்மையை எடுத்துரைக்கிறது. அவர்கள் இன்று அளித்துள்ள எச்சரிக்கை தகவல்கள் :
வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP ஐ சொல்லுங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு ஓடிபி-ஐ தெரிவிக்க வேண்டியது இல்லை. உங்கள் ஓடிபி-ஐ யாருக்கும் தெரிவிக்காதீர்கள்.
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகள் ஆகிய அனைத்தும் 2020 அக்டோபர் 15 வரை மூடப்பட்டிருக்கும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் ஆணை பிறப்பித்திருப்பதாக ஒரு போலி ஆவணம் பரவலாகப் பகிரப்படுகிறது.
இந்த ஆவணம் போலியானது, அத்தகைய ஆணையை சுற்றுலா அமைச்சகம் பிறப்பிக்கவில்லை. இதனை நம்ப வேண்டாம்.
இவ்வாறு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago