கரோனா தொற்றினைத் தடுக்கும் நாசித் துவாரங்களுக்கான களிம்பை உருவாக்க மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை நிதி ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தொற்றை செயலிழக்கச் செய்வதற்கான தொழில் நுட்பத்துக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டபூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஆதரவு அளித்துள்ளது. இதனை, மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் துறை உருவாக்கியுள்ளது.
கரோனோ வைரஸ் உடலில் நாசித் துவாரங்கள் வழியாக அதிக அளவில் நுழையும் என்பதால், அப்பகுதியில் பூசுவதற்கான களிம்பு ஒன்றை மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் துறை தயாரிப்பதற்கு நிதி அளிப்பது பேருதவியாக இருக்கும். இந்தக் களிம்பு, சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு உதவுவதுடன், கொவிட்-19 சமூகப் பரவலாக மாறுவதையும் பெருமளவுக்குக் குறைக்கும் என்பதால், நோய் மேலாண்மைக்கும் இது பயன்படும்.
கரோனோ வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் பணியாற்றும் நமது சுகாதாரப் பணியாளர்களும், மற்றவர்களும் 200 சதவீத பாதுகாப்புக்கு உரியவர்களாவர். தற்போது மேற்கொள்ளப்படு வரும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், உருவாக்கப்பட்டு வரும் களிம்பும் இணைப்பாகச் செயல்பட்டு, வலிமையான கூடுதல் பாதுகாப்பை வழங்கும்’’ என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago