தீவிரமடையும் கரோனா; இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு பாதிப்பு, 10 பேர் மேலும் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் மோசம்

By ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதால், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இதில் மிக மோசமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் உள்ள பாதிப்பில் மூன்றில் ஒருபகுதி மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும், டெல்லியிலும் உள்ளன.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 64 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.

அடுத்த இடத்தில் குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 13 பேரும், டெல்லியில் 9 பேரும், தெலங்கானா, தமிழகம், பஞ்சாபில் தலா 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தி்ல 5 பேரும், ஆந்திராவில் 4 பேரும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளா, ஜம்மு காஷ்மீரில் தலா 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 19 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 576 பேர் பாதிக்கப்படடுள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 364 பேரும், கேரளவில் 336 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 326 பேரும், ராஜஸ்தானில் 238 பேரும், ஆந்திராவில் 305 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 229 பேரும், கர்நாடகாவில் 175 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 165 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 116, மேற்கு வங்கத்தில் 99, பஞ்சாபில் 91, ஹரியாணாவில் 147, பிஹாரில் 38, அசாமில் 27, உத்தரகாண்ட்டில் 31, ஒடிசாவில் 42, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 10 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 18 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 4 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்