கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழு அனைத்து கல்வி நிலையங்கள், மதம் தொடர்பான நிகழ்வுகள் ஆகியவை மே மாதம் 15ம் தேதி அரை செயல்பட வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.
செவ்வாய்க் கிழமையன்று கரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். 509 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து 165 மரணங்கள், 5,126 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள் குழு பரிந்துரை மேற்கொண்ட போது கல்வி நிலையங்களின் செயல்பாடுகள், பொது இடங்களில் அதிகம் கூடும் மத நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மே 15ம் தேதி வரை நிறுத்தி வைக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிராவில் மேலும் 12 பேர் மரணமடைந்துள்ளனர். அதன் மூலம் அங்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் டெல்லியில் காற்று மாசு 50 சதவீதம் குறைந்தது
» ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த அசாம் மாநில எம்எல்ஏ கைது
ராஜஸ்தானில் கரோனா கேஸ்கள் 283 ஆக அதிகரிக்க, அதிவிரைவு டெஸ்ட் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தியா கரோனா வைரஸின் உள்பரவல் நிலையிலிருந்து பெரிய அளவில் பரவும் நிலையான கட்டுப்படுத்த வேண்டிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. மேலும் சாதாரண மற்றும் மிகச்சாதாரண கோவிட்-19 கேஸ்களுக்காக கோவிட் கேர் செண்டர்களை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ வசதிகள் முழு மருத்துவ வசதியாக இருக்கலாம், அல்லது மருத்துவமனையில் ஒரு கட்டிடம் இதற்கென்று ஒதுக்கப்படுவதாக இருக்கலாம். அதாவது தனி நுழைவாயில், வெளியேற்ற வசதிகள் மற்றும் தனி ஐசியுக்கள் வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கொண்ட தனிவசதியாக இருக்கலாம் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஆனால் 21 நாட்கள் லாக்-டவுன் அகற்றப்படுவத் குறித்து அல்லது நீட்டிக்கப்படுவது குறித்து எந்த ஒரு தகவலும் உறுதியாக இல்லை.
இதுவரை இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 11,975 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago