மகாராஷ்டிராவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 12 பேர் பலி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் கரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில12 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம்,கேரளா, தெலங்கானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியபிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் தொடக்கம் முதலே கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. டெல்லி நிஜாமுதீன்பகுதியில் நடந்த முஸ்லிம் மதபிரார்த்தனைக்கு பிறகு இந்தமாநிலங்களின் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

இம்மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில12 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 6 பேர் மும்பையிலும், புனேயில் 3 பேரும், நாக்பூர், சதாரா, மீரா பாயந்தர் ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சதாரவில் உயிரிழந்தவர் மட்டும் அமெரிக்கா சென்று வந்துள்ளார். மற்ற 11 பேரும் எந்த நாட்டுக்கும் செல்லவில்லை என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்