ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதால் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.
இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக கைதிகளை பரேல் அல்லது முன் ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேல் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதுபோன்ற சூழலில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அதேசமயம் கரோனா தொற்று ஏற்பாடாமல் தடுக்கவும், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்து தரவும் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago