2010-ம் ஆண்டு வரை மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலராக பதவி வகித்த அதிகாரி கே.சுஜாதா ராவ், குறிப்பாக இந்த கரோனா தொற்று வெளிநாடு சென்று இந்தியா திரும்பியவர்கள் மூலமாகவே பரவியுள்ளது என்றார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், மேலும் கூறும்போது லாக்-டவுனினால் சொந்த ஊர்களுக்குப் புலம் பெயந்த தொழிலாளர்களினால் கரோனா கிராமங்களுக்கும் பரவுவது பற்றிய தரவுகள் நம்மிடையே இல்லை என்கிறார். அயல்நாடு சென்று திரும்பியவர்கள் வைரஸுடன் முறைசாரா தொழிலாளர்களிடையே ஊடாடியிருந்தால் என்ற கோணத்தில்தான் ஊரகப் பகுதிகளுக்கும் கரோனா தொற்று பரவியது பற்றி நாம் அறுதியிட முடியும் என்கிரார் டாக்டர் சுஜாதா ராவ்:
“இது நெருக்கடி காலக்கட்டம் மற்றும் அசாதாரணச் சூழல். நம் மக்கள் சூழ்நிலைக்கேற்ப எழுந்து நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த 1 மாதகாலமாக வெளியாகிவரும் பெரிய அளவிலான கரோனா வைரஸ் குறித்த தகவல்கள் சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இதன் அடிப்படைகளை வழங்கியிருக்கும் என்று கருதுகிறேன். இப்போதைக்கு இன்னொரு முக்கிய பரிமாணம் கரோனா டெஸ்ட்டிங்.. இதில்தான் இப்போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் நாம் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இப்போது போராடி வருகிறோம்.
உண்மையில் தொற்று எங்கு உள்ளது என்பது குறித்து முழு விவரம் நமக்குத் தெரியவில்லை. கேரளா தொற்றில் முன்னில வகித்தது தற்போது 4வது இடத்துக்குச் சென்று விட்டது. தமிழ்நாடு திடீரென பட்டியலில் முன்னிலைக்கு வந்துள்ளது. விஷயங்கள் வேகமாக மாறி வருகின்றன. தாராவியில் கரோனா தொற்று கவலையளிப்பதாக உள்ளது, ஏனெனில் அப்பகுதியில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
மனிதர்களிலிருந்து பரவும் தொற்றுக்கு எதிராக காலத்தை எதிர்த்துப் போராடி வருகிறோம். எனவே மருத்துவப் பரிசோதனையை மிக அதிகமாகத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. டெஸ்ட்களை துரிதப்படுத்தவில்லை எனில் கரோனா வைரசை நாம் வெல்வது கடினம். இது வேகமாக நடைபெற வேண்டும். அதிவிரைவு டெஸ்ட் சாதனங்கள் வருகின்றன, ஆனால் இவர் நோய்-எதிர்ப்பாற்றல் இம்யூனோகுளோபுலின் சோதனையாக மட்டுமே உள்ளது. இது தொற்றை 7வது நாளில்தான் தொற்றை காட்டும்.
மேலும் கரோனா வைரஸ் டெஸ்ட் இலவசமாக்கப்பட வேண்டும். டெஸ்ட்டுக்கு கட்டணமாக ரூ.4500 என்று நிர்ணயித்தது முட்டாள்தனமானது. அதுவும் டெஸ்டிங் மட்டுமே இதற்கான பாசிட்டிவ் தீர்வாக இருக்கும் போது ரூ.4,500 கட்டணம் நிர்ணயித்தது தவறு. அரசு தரப்பு வசதிகளை விட தனியார் மருத்துவத்துறைதான் உள்கட்டுமானம் டெஸ்ட் வசதிகளில் பெரிய அளவில் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலவசமாக டெஸ்ட் நடத்த வேண்டும் மக்களை சோதனைக்காக வர ஊக்குவிக்க வேண்டும். டெஸ்ட்டின் மூலம் வைரஸ் ஹாட்ஸ்பாட்களை கரைகாண வேண்டும்.
முன் தயாரிப்பிலும், திறனுள்ள வென்ட்டிலேட்டர்கள், ஐசியு படுக்கைகள் ஆகியவற்றிலும் நாம் தயாராக இல்லை. அமிதாப் காந்த் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளியான தகவல்களின்படி நாடு முழுதும் சுமார் 30,000 வெண்ட்டிலேட்டர்கள் செயலிழந்து கிடக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன. கொஞ்சம்தான் வைத்திருந்தாலும் அதையும் செயலில் இருப்பதாக நம்மால் பராமரிக்க முடியவில்லை. 2 மாதகாலமாக கரோனா கொள்ளை நோய் இருந்து வருகிறது இந்தக் காலக்கட்டத்தில் இதனை பழுது பார்த்து செயலபட வைத்திருக்க வேண்டாமா? நாம் கணத்தில் வாழ்கிறோம் எதிர்காலத் திட்டமிடல் இல்லை...
மற்ற நாடுகள் கற்றுக் கொள்கின்றன. எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் சீனாவில் சார்ஸ் வைரஸ் பரவிய போது அவர்கள் ஹார்வர்ட் பப்ளிக் ஹெல்த் நிபுணர்களை வரவழைத்தார்கள். இவர்கள் மூலம் அதைக் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த நடைமுறையையும் கற்றுக் கொண்டனர். அவர்கள் பாடங்களைக் கற்றுக் கொண்டனர். இதனால்தன கரோனா பரவலை அவர்கள் வூஹானுடன் சிறைப்படுத்த முடிந்தது. வைரஸ் சுமை அதிகமாக இருந்தாலும் சீனாவில் அதனை சிறப்பாக மேலாண்மை செய்தனர்.
இந்தியாவில் நாம் சார்ஸ், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், ஜிகாவின் தடங்கள் இருந்தன, எபோலாவைத் தவிர்த்து விட்டோம். கடந்த 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக நாம் இந்த வைரஸ் தொற்றுக்களை அனுபவித்து வருகிறோம். போலியோவை அகற்றி விட்டோம், ஹெச்.ஐ.வி. தொற்றுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். நமக்கு இந்த அனுபவங்கள் எல்லாம் உள்ளன, ஆனால் நாம் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துக்கு அரசியல் மற்றும் வளர்ச்சி திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதில்லை.
இந்த அரசு கூட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதும் ஆயுஷ்மான் பாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறது, சமூகப் பரவல் தொற்றும் நோய் அல்லாத நோய்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறது. இதுவும் முக்கியம்தான் இல்லை என்று கூறவில்லை, ஆனாலும் இன்னமும் 36% நோய்கள் சமூகப் பரவல் தொற்று நோயாகவே நம் நாட்டில் உள்ளன. எனவே காசநோய் உட்பட தொற்று நோய்களிலிருந்து நாம் நம் கவனத்தைத் திருப்ப முடியாது. நமக்கு நோய்களில் இரட்டைச் சுமை உள்ளது. இந்தியாவில் பொதுச்சுகாதாரம் மிக மோசமாக உள்ளது.
இந்த கரோனா தொற்று நம் அரசியல் தலைமைகளுக்கு சிறந்த பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். பொதுச்சுகாதாரத் துறை ஏற்படுத்தி, கண்காணிப்பு, தொற்று நோய் ஆய்வியல் , உயிர் புள்ளியியல் மற்றும் முக்கியமான பொதுச்சுகாதாரத் துறைகளை வளர்த்தெடுக்க வேண்டும். குறைந்த நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் 300 மில்லியன் மக்களின் வறுமை, உலகமயமான நம் உலகில் தொற்றுக்கள் பரவும் வேகம் ஆகியவை சியாச்சனில் நம் ராணுவ வீரர்கள் எப்படி ஓய்வு ஒழிச்சலின்றி பாதுகாவலில் இருக்கிறார்களோ அதே போல் நாமும் நம் அரசும் முழுநேர பாதுகாவலில் இருப்பது அவசியம்.
இவ்வாறு தி இந்து (ஆங்கிலம்) பேட்டியில் டாக்டர் சுஜாதா ராவ் தெரிவித்துள்ளார்.
மூலம்: தி இந்து (ஆங்கிலம்)- நாராயண் லஷ்மண்
சுருக்கமாக தமிழில்: இரா.முத்துக்குமார்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago