மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத் துவமனை டாக்டர் பப்லு சர்தார். இவர் கடந்த மார்ச் 25-ம் தேதி இரவு பணி முடிந்து கிளம்பும்போது, ஒரு ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரிடம் ராஜேஷ் பாஸ்கி என்பவர் பேரம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் சர்தார்.
ராஜேஷ் பாஸ்கியின் 8 வயதுமகள் ஏஞ்சலா அந்த மருத்துவமனையில் குடல் அடைப்புக்கு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், சிறுமி ஏஞ்சலா, ராஜேஷ் மற்றும்அவரது மனைவி ஆகியோர்2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர். ஆனால், மற்றொரு மகள் வீட்டில் தனியாக இருப்பதால் அவர்கள் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பஸ் வசதி இல்லாத நிலையில்மார்ச் 25-ம் தேதி இரவு ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களிடம் பேசியுள்ளார் ராஜேஷ். ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள சுலுங்கா என்ற கிராமம்தான் ராஜேஷிடம் கிராமம். இது மருத்துவமனையிலிருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ளது அந்த கிராமம். இதனால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் ரூ.13 ஆயிரம் வரை கேட்டனர். ஆனால் ராஜேஷிடம் போதிய பணம் இல்லை.
நிலைமையைப் புரிந்துகொண்ட சர்தார், ராஜேஷின் குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார். தானே தனது சொந்தக் காரில்அவர்களை வீட்டில் கொண்டுசேர்க்க முடிவு செய்து அதை வெற்றிகரமாகச் செய்துள்ளார்.
இதுகுறித்து சர்தார் கூறும்போது, "சிறுமி என்னிடம் சிகிச்சை பெறவில்லை. ஆனால் சிறுமியின் குடும்பத்தினரிடம் போதிய பணம் இல்லாமல்தான் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் என்பதைப் தெரிந்துகொண்டேன். 26-ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் பணிக்கு வரவேண்டும் என்பதால் அன்று இரவு 9 மணிக்கு எனது காரில் ஏஞ்சலாவின் குடும்பத்துடன் கிளம்பினேன். அதிகாலை 3 மணிக்கு சிறுமியின் வீட்டை அடைந்தேன். அவர்களை பத்திரமாக சேர்த்துவிட்டுத் திரும்பினேன்” என்றார்.
சிறுமியை அவரது வீட்டில் சேர்த்த டாக்டர் செய்த செயலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago